வடகொரியா நிறுவன தலைவரின் இளைய சகோதரர் கிம் யோங் ஜூ காலமானார்


வடகொரியா நிறுவன தலைவரின் இளைய சகோதரர் கிம் யோங் ஜூ காலமானார்
x
தினத்தந்தி 15 Dec 2021 9:51 AM GMT (Updated: 15 Dec 2021 10:19 AM GMT)

வடகொரியாவை நிறுவிய தலைவரான கிம் இல் சுங் என்பவரின் இளையசகோதரரான கிம் யோங் ஜூ காலமானார்.

சியோல், 

வடகொரியாவை நிறுவிய தலைவரான கிம் இல் சுங் என்பவரின் இளையசகோதரரான கிம் யோங் ஜூ காலமானார். வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்று விட்ட தாத்தாவானகிம் யோங் ஜூ எப்போது இறந்தார் என்ற விவரத்தை வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை. தாத்தா கிம் யோங் ஜூ மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை கிம் ஜாங் உன் தெரிவித்ததாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், "கிம் யோங் ஜு (தொழிலாளர்களின்) கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த அர்ப்பணிப்புடன் போராடினார்.  வடகொரியாவின் ஆளும் கட்சி மற்றும் அரசின் முக்கிய பதவிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிம் யோங் ஜூ 1920 ஆம் ஆண்டு பிறந்ததாக சியோலின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், கிம்   யோங் ஜூ - வுக்கு  மறைவின் போது 100- அல்லது 101-வயது இருக்கலாம் எனத் தெரிகிறது. 

கிம் இல் சுங் கடந்த 1948- ஆம் ஆண்டு வடகொரியா நாட்டை நிறுவினர். அப்போது  இருந்து  கிம் குடும்பத்தினரே அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். கிம் இல் சுங் 1994- ஆம் ஆண்டு காலமானார்.  இதையடுத்து, அவரது மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். கிம் ஜோங் இல் கடந்த 2011- ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதன்பிறகு அவரின் கடைசி மகனான கிம் ஜாங் உன் ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். 


Next Story