பிரேசிலில் சுற்றுலா படகு மீது பாறை விழுந்து 6 பேர் பலி


பிரேசிலில் சுற்றுலா படகு மீது பாறை விழுந்து 6 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2022 9:12 AM GMT (Updated: 2022-01-09T14:42:54+05:30)

பிரேசில் நாட்டில் சுற்றுலா படகு மீது பாறை விழுந்து 6 பேர் கொல்லப்பட்டனர்.


பிரேசிலியா,


பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் பர்னாஸ் ஏரியில் சுற்றுலாவாசிகள் சிலர் படகு ஒன்றில் நேற்று பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.  இந்த நிலையில், அங்கிருந்த குன்று ஒன்றின் ஒரு பகுதியாக இருந்த பெரிய பாறை ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது.

இதில், அந்த வழியே சென்ற படகின் மீது பாறை விழுந்துள்ளது.  இந்த விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  32 பேர் காயமடைந்து உள்ளனர்.  20 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என நம்பப்படுகிறது.  இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கவனத்தில் எடுத்து கொண்ட பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனேரோ, தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இணைந்து செயல்பட கடற்படையின் நிவாரண படையை சேர்ந்த குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.


Next Story