உலக செய்திகள்

தடுப்பூசி அட்டை கட்டாயம்; மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடக்கும் நேபாள மக்கள்... + "||" + Vaccination card mandatory; Nepalese people waiting in line for hours ...

தடுப்பூசி அட்டை கட்டாயம்; மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடக்கும் நேபாள மக்கள்...

தடுப்பூசி அட்டை கட்டாயம்; மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடக்கும் நேபாள மக்கள்...
நேபாளத்தில் தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டை கட்டாயம் என அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

காத்மண்டு,


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் சிக்கி தவித்து வருகிறது.  இதனை முன்னிட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், ஸ்டேடியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கும் மற்றும் உள்ளூர் விமானங்களில் ஏறுவதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.

இந்த முடிவானது வருகிற 17ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு கொரோனா பேரிடர் மேலாண் மையம் தெரிவித்து உள்ளது.

நேபாளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டை கட்டாயம் என அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

நேபாளத்தில் 2021ம் ஆண்டு பிப்ரவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  எனினும், இதுவரை 37.3 சதவீதம் மக்களே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  தடுப்பூசி மையங்களில் கோவிஷீல்டு, ஜன்சென் மற்றும் வெரோசெல் ஆகிய தடுப்பூசிகளை மக்களின் விருப்பத்திற்கேற்ப செலுத்துகின்றனர்.  வெளிநாடு செல்வோருக்கு ஜன்சென்னும் மற்றவர்களுக்கு பிற இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன.