தடுப்பூசிகள் பற்றி தவறான தகவல்களை பரப்புவதா? போப் ஆண்டவர் கண்டிப்பு


தடுப்பூசிகள் பற்றி தவறான தகவல்களை பரப்புவதா? போப் ஆண்டவர் கண்டிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 11:57 PM GMT (Updated: 28 Jan 2022 11:57 PM GMT)

கொரோனா வைரசுக்கு எதிராக வலிமையான பேராயுதங்களாக தடுப்பூசிகள்தான் உள்ளன.

ரோம்,

கொரோனா வைரசுக்கு எதிராக வலிமையான பேராயுதங்களாக தடுப்பூசிகள்தான் உள்ளன. ஆனால் அந்த தடுப்பூசிகள் பற்றி தவறான தகவல்களை பரப்புவது உலகளவில் தொடர்கிறது. இந்த தருணத்தில் கொரோனா தொற்று நோய் தொடர்பான தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு உண்மை சரிபார்ப்பு வலையமைப்பை கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சந்தித்தார். அப்போது அவர் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களை பரப்புவோரை கண்டித்தார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "இந்த நாட்களில் தொற்று நோய்க்கு கூடுதலாக ‘இன்போடெமிக்’ (தவறான தகவல்கள் நோய் போல பரவுவது) பரவி வருகிறது. இதை பார்க்க தவறி விட முடியாது. ஆனால் பயத்தின் அடிப்படையில் யதார்த்தத்தை சிதைப்பது, உலகளாவிய சமூகத்தில் பொய்யான தகவல்கள் வெடிப்புக்கு வழிவகுக்கிறது" என கூறினார். போலி செய்திகள் மறுக்கப்பட வேண்டும். ஆனால் தனிப்பட்ட நபர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story