ஆப்கானிஸ்தானுக்கு 3 டன் மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா


ஆப்கானிஸ்தானுக்கு 3 டன் மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா
x
தினத்தந்தி 29 Jan 2022 11:00 PM GMT (Updated: 2022-01-30T04:30:40+05:30)

ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.

புதுடெல்லி, 

பொருளாதார சரிவு மற்றும் வறுமையில் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் மக்களின் துயரத்தை போக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி உள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று 3 டன் அளவிலான உயிர் காக்கும் மருத்துவ பொருள்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அந்த மருத்துவ பொருட்கள் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story