ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்; குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்; குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 April 2022 8:28 AM GMT (Updated: 17 April 2022 8:28 AM GMT)

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.




காபூல்,



ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்து வந்த நீண்டகால போரில் வெற்றி பெற்று தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.  அந்நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த தலீபான்களின் அரசு நடந்து வருகிறது.  அவர்களுக்கு அஞ்சி குடிமக்களில் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குணார் ஆகிய இரு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் விமானம் ஒன்று அதிரடியாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

இந்த தாக்குதலில், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுபற்றி ஆப்கானிஸ்தானின் அமைதி கண்காணிப்பகத்தின் நிறுவனர் மற்றும் பத்திரிகையாளரான ஹபீப் கான் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தி வரும் போர் குற்றங்களை கவனத்தில் கொள்ளும்படி சர்வதேச குற்ற நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்புக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கானுக்கு தலீபான்கள் சம்மன் அனுப்பியுள்ளனர்.  அந்நாட்டு அரசுக்கு இந்த சம்பவம் பற்றி தெரிவிக்கும்படி அதில் தெரிவித்து உள்ளனர்.


Next Story