இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2022 3:27 AM GMT (Updated: 6 May 2022 3:27 AM GMT)

இலங்கை அரசு பதவி விலக கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி, கடந்த மாதம் 9-ந் தேதியில் இருந்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு சுகாதார அமைப்பினர், கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கி ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதில் இலங்கை அரசாங்கம் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்படி இலங்கை அரசு பதவி விலகாவிட்டால் வரும் 11-ம் தேதி முதல் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டகாரர்கள் பகீரங்கமாக தெரிவித்துள்ளனர்

Next Story