உலக செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி; ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம் + "||" + Risk of closing 4,000 petrol stations in Spain due to rising fuel prices

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி; ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி; ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்
எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய ஸ்பெயின் அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கள்களை சந்தித்து வருகிறது.
மாட்ரிட்,

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கள்களை சந்தித்து வருகிறது. 

முன்னதாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என கண்டனங்கள் எழுந்தன. இதனால் 350-க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் சுமார் 3,000 முதல் 4,000 பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அந்நாட்டின் எரிபொருள் விநியோகஸ்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. "எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
எரிபொருள் விலையை உயர்த்தப் போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
2. எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு...பிரேசில் அதிபருக்கு எதிராகப் போராட்டம்
பிரேசில் எரிபொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு காரணமாக அந்நாட்டு அதிபருக்கு எதிராகப் மக்கள் போராட்டம் நடத்தினர்.
3. எரிபொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சனையாக உள்ளது - ஜி.கே.வாசன்
எரிபொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சனையாக உள்ளது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
4. மியாமி ஓபன் டென்னிஸ்; ஸ்பெயின், நார்வே வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், நார்வே வீரர்கள் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
5. எரிபொருள் விலையேற்றம்; மத்திய அரசை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்!
டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.