நியூசிலாந்தில் கடற்கரைக்கு சென்ற 2 இந்திய வாலிபர்கள் கடலில் மூழ்கி பலி


நியூசிலாந்தில் கடற்கரைக்கு சென்ற 2 இந்திய வாலிபர்கள் கடலில் மூழ்கி பலி
x

கடலில் இறங்கி குளித்தபோது ராட்சத அலை வந்து அவர்களை இழுத்து சென்றது. அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

வெல்லிங்டன்,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் சவுரின் நயன்குமார் படேல் (வயது 28) மற்றும் அன்சுல் ஷா(31). நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற அவர்கள், ஆக்லாந்தில் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

அவர்கள் இருவரும் சம்பவத்தன்று அங்குள்ள பைகா கடற்கரைக்கு பொழுதுபோக்க சென்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. அப்போது கடலில் இறங்கி குளித்தபோது ராட்சத அலை வந்து அவர்களை இழுத்து சென்றது. அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒருவரை மோசமான நிலையில் உயிருடன் மீட்டனர். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மற்றொருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது


Next Story