மாவட்ட லீக் கபடி போட்டி: சென்னையில் இன்று நடக்கிறது


மாவட்ட லீக் கபடி போட்டி: சென்னையில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 2 Feb 2020 5:09 AM IST (Updated: 2 Feb 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மாவட்ட லீக் கபடி போட்டி இன்று நடக்க உள்ளது.

சென்னை,

சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கம் சார்பில் மாவட்ட ஆண்கள் லீக் கபடி போட்டி சென்னை தண்டையார்பேட்டை துறைமுக கழக காலனியில் உள்ள பாபு ஜெகஜீவன்ராம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் ஜெய்பவானி, ஜாலி பிரண்ட்ஸ், அசோக் பிரதர்ஸ், புதிய தென்றல் உள்பட 16 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதே மைதானத்தில் மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெறுகிறது.

இந்த தகவலை சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story