திருப்பம் தந்த விக்கெட்


திருப்பம் தந்த விக்கெட்
x
தினத்தந்தி 7 March 2017 11:30 PM GMT (Updated: 7 March 2017 7:49 PM GMT)

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா செய்த தவறு, ஆட்டத்தின் போக்கு இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதற்கு வழிவகுத்தது.

ஷான் மார்ஷ் 9 ரன்னில் (19 பந்து) ஆடிக்கொண்டிருந்த போது, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆப்-கட்டராக வீசிய பந்தை அடிக்காமல் மட்டையை மேலே உயர்த்தினார். அது நேராக அவரது காலுறையை தாக்கியது. இந்திய வீரர்கள் அப்பீல் செய்ததும் நடுவர் விரலை உயர்த்தி விட்டார்.

பிறகு ஷான் மார்ஷ் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் படி அப்பீல் செய்யலாமா? என்று எதிர்முனையில் நின்ற கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் ஆலோசனை கேட்டார். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்டு ஒரு டி.ஆர்.எஸ். அப்பீல் மட்டுமே பாக்கி இருந்தது. அதுவும் வீணாகி போனால், முக்கியமான தருணத்தில் எல்.பி.டபிள்யூ.க்கு அப்பீல் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் விடக்கூடும் என்று கணக்கு போட்ட ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷிடம் வேண்டாம் என்று கூறி விட்டார். இதையடுத்து ஷான் மார்ஷ் நடையை கட்டினார்.

ஆனால் ரீப்ளேயில் பந்து ஆப்-சைடுக்கு வெளியே செல்வது தெளிவாக தெரிந்தது. அப்பீல் செய்திருந்தால் அவர் அவுட்டில் இருந்து நிச்சயம் தப்பித்து இருப்பார். முதலாவது இன்னிங்சில் ஷான் மார்ஷ் 66 ரன்கள் எடுத்தது நினைவு கூரத்தக்கது. ஸ்டீவன் சுமித்தும், ஷான் மார்சும் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் சுட்டிகாட்டியுள்ளது.

Next Story