கிரிக்கெட்

கோலியின் வரவேற்பு பத்திரிகையில் புதுமை + "||" + Kohli reception Novelty in the magazine

கோலியின் வரவேற்பு பத்திரிகையில் புதுமை

கோலியின் வரவேற்பு பத்திரிகையில் புதுமை
கோலியின் வரவேற்பு பத்திரிகையில் புதுமை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் வைத்து கரம் பிடித்தார். அடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 21-ந்தேதி டெல்லியிலும், 26-ந்தேதி மும்பையிலும் நடக்கிறது. வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர்.


பத்திரிகையுடன் இணைத்து ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு இந்த மாதிரியே அழைப்பிதழை கொடுத்துள்ளனர். இதற்கிடையே, தனக்கு திருமண வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் விராட் கோலி, ‘டுவிட்டர்’ மூலம் தனித்தனியே நன்றி தெரிவித்துள்ளார்.