கிரிக்கெட்

ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் ஸ்டீவ் வாக்கின் மகனுக்கு இடம் + "||" + Australian Junior Team The place for Steve Walk son

ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் ஸ்டீவ் வாக்கின் மகனுக்கு இடம்

ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் ஸ்டீவ் வாக்கின் மகனுக்கு இடம்
ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் ஸ்டீவ் வாக்கின் மகனும் தேர்வாகியுள்ளார்.
16 அணிகள் பங்கேற்கும் 12-வது ஜூனியர் உலக கோப்பை (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 3-ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அணியில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக்கும் இடம்பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டரான ஆஸ்டின் வாக் கடந்த ஆண்டு ஜூனியர் தேசிய சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லாண்டின் மகன் வில் சுதர்லாண்டும் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்து லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா லெவன் அணிக்காக களம் இறங்கி 133 ரன்கள் விளாசிய ஜாசன் சங்ஹா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ரையான் ஹாரிஸ் தலைமை பயிற்சியாளராகவும், கிறிஸ் ரோஜர்ஸ் உதவி பயிற்சியாளராகவும் செயல்படுவார்கள்.