கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெயின் + "||" + Test Cricket Against Zimbabwe: South Assignment Team TVillers, Stein

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெயின்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெயின்
தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் வருகிற 26–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை பகல்–இரவாக நடக்கிறது.

போர்ட்எலிசபெத்,

தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் வருகிற 26–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை பகல்–இரவாக நடக்கிறது. முதலாவது 4 நாள் பகல்–இரவு டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வு எடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடிய டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசியாக 2016–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடி இருந்தார். 2016–ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஸ்டெயின் தற்போது தான் அணிக்கு திரும்பி உள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் தசைப்பிடிப்பால் விலகிய மோர்னே மோர்கலும், கடந்த ஜூலை மாதத்தில் முதுகுவலி காரணமாக அணியில் இருந்து வெளியேறிய பிலாண்டரும் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்த கேப்டன் டுபிளிஸ்சிஸ் உடல் தகுதி பெற்று அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:–

டுபிளிஸ்சிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, பவுமா, குயின்டான் டி காக், டி புருன், டிவில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மகராஜ், மார்க்ராம், மோர்னே மோர்கல், பெலக்வாயோ, பிலாண்டர், ரபடா, ஸ்டெயின்.