கிரிக்கெட்

ஐ.சி.சி. பெண்கள் கனவு அணியில் 3 இந்தியருக்கு இடம் + "||" + ICC Girls dream team 3 Indians place

ஐ.சி.சி. பெண்கள் கனவு அணியில் 3 இந்தியருக்கு இடம்

ஐ.சி.சி. பெண்கள் கனவு அணியில் 3 இந்தியருக்கு இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்ரி தேர்வாகியுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்ரி தேர்வாகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் டெஸ்டில் இவர் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமெ சட்டர்த் வெய்ட்டும், சிறந்த 20 ஓவர் போட்டி வீராங்கனை மற்றும் வளரும் நட்சத்திர விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனியும் தட்டிச் சென்றனர்.

பெண்கள் கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி. கனவு அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கேப்டன் மிதாலிராஜ் ஒரு நாள் போட்டி கனவு அணியிலும், ஹர்மன்பிரீத் கவுர் 20 ஓவர் போட்டி அணியிலும் இடம் பெற்றுள்ளனர். மற்றொரு இந்திய வீராங்கனையான சுழற்பந்து வீச்சாளர் எக்தா பிஷ்டுக்கு இரு வடிவிலான அணியிலும் இடம் கிட்டியுள்ளது.