பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நடக்கிறது


பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 23 Dec 2017 8:45 PM GMT (Updated: 23 Dec 2017 8:41 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் முத்தூட் குழுமம் ஆதரவுடன் 4–வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கோப்பைக்கான பள்ளி அணிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் முத்தூட் குழுமம் ஆதரவுடன் 4–வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கோப்பைக்கான பள்ளி அணிகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, கடலூர், திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இந்த போட்டி வருகிற 26–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 72 பள்ளி அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் இறுதி சுற்று போட்டி நெல்லையில் ஜனவரி 7–ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சுற்றில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, 2–வது இடம் பிடிக்கும் அணி மற்றும் மாவட்ட போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் கலந்து கொள்ளும். இந்த அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபினவ் முகுந்த் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் இந்தியா சிமெண்ட்ஸ் விளையாட்டு ஆலோசகர் கே.எஸ்.விஸ்வநாதன், முத்தூட் குழும செயல் இயக்குனர் ஜார்ஜ் முத்தூட் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story