கிரிக்கெட்

2019-ம் ஆண்டுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார், லீமான் + "||" + Australian coach leaves the post, Lee

2019-ம் ஆண்டுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார், லீமான்

2019-ம் ஆண்டுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார், லீமான்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் லீமான் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் லீமான் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி 2015-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. இரண்டு ஆஷஸ் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.


இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப்போவதாக லீமான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு எனது ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை, வேறு பயணத்தை தொடர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

தற்போதைய பணியை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.