ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசிய இளம் கிரிக்கெட் வீரருக்கு பாராட்டு


ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசிய இளம் கிரிக்கெட் வீரருக்கு பாராட்டு
x

ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசிய இளம் கிரிக்கெட் வீரர் நவிந்து பகாசரா, இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷனைப் போல பேட்டிங் வீரராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


கடந்த 9ஆம் தேதி நடந்த ‘Murali Goodness Cup' போட்டித் தொடர், இலங்கையின் முன்னாள் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.இந்த தொடரில் விளையாடிய 15 வயதான நவிந்து பகாசரா, தொடரின் இறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் (’no ball' உட்பட) ஏழு சிக்ஸர்களை விளாசி சாதனைப் படைத்தார்

அவரின் இந்த சாதனைப் பாராட்டிய முரளிதரன், பகாசராவை வாழ்த்தியதோடு, கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக கூறினார்.

இந்தியாவின் பிரபல மாத இதழ் பத்திரிக்கையான ‘இந்தியா டுடே’ கூட, பஹசாராவின் புகைப்படத்தை தனது இதழின் அட்டைப் படத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தியது. இந்நிலையில் நவிந்து பகாசரா அளித்த பேட்டியில், நான் எனது 10 வயதில் தான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். எனது பயிற்சியாளர் அஞ்சுலா மெண்டிஸ் தான் எனது திறமையை முதலில் அடையாளம் கண்டார்.

அதன் பிறகு 13 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் நான் விளையாடினேன். நான் மூன்றாவது வரிசையில் தான் களமிறங்குகிறேன்.ஆனால், முதல் வரிசை களமிறங்குவதே எனது விருப்பமாகும். இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷனை எனக்கு மிகவும் பிடிக்கும்.அவரைப் போல பேட்டிங் வீரராக வேண்டும், எனது லட்சியங்களுக்கு பக்க பலமாக இருப்பவர் எனது பயிற்சியாளர் அஞ்சுலா மெண்டிஸ் ஆவார்.50 ஓவர் போட்டிகளில் ஆடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஒருநாள் இலங்கை அணியில் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

Next Story