கிரிக்கெட்

‘பும்ராவுக்கு வாய்ப்பு கொடுங்கள்’- நெஹரா + "||" + Give Bumrah a chance Nehara

‘பும்ராவுக்கு வாய்ப்பு கொடுங்கள்’- நெஹரா

‘பும்ராவுக்கு வாய்ப்பு கொடுங்கள்’- நெஹரா
‘பும்ராவுக்கு வாய்ப்பு கொடுங்கள்’- ஆஷிஷ் நெஹரா பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடக்கும் முதலாவது டெஸ்டுக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவை இறக்கினால் அது நல்ல முடிவாக இருக்கும். இந்திய அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது தெரியாது. பும்ரா போன்ற வீரரால் கேப்டவுன் ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் பும்ராவை முன்னணி பவுலராக பார்க்கிறோம்.


ஆனால் ஓராண்டுக்கு முன்பு ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக அவர் எத்தனை ஓவர்கள் பந்து வீசியிருக்கிறார் என்பதை சோதித்து பார்க்க வேண்டும். யார்க்கராக வீசுவதில் பும்ரா கைதேர்ந்தவர். அது மட்டுமின்றி அவரது வித்தியாசமான பந்து வீச்சை எதிரணியினர் சமாளிப்பது கடினம். எனவே அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கலாம்.’ என்றார்.