கிரிக்கெட்

ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + Ashes last Test starts today

ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரில் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.

சிட்னி,

இங்கிலாந்து– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரில் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. தொடரில் 3–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா வெற்றியுடன் முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. அதே சமயம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும். இடுப்பு பகுதியில் காயம் அடைந்த ஆல்–ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மாசன் கிரேன் அறிமுக வீரராக களம் காண்பார் என்றும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் தெரிவித்துள்ளார்.

இதேபோல் காலில் ஏற்பட்ட காயத்தால் டெஸ்டில் ஆடாத ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்புகிறார். இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.