கிரிக்கெட்

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் + "||" + 3 nations 20 ODI cricket

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்
3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்
லண்டன்,

இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் பிப்ரவரி 3-ந் தேதி தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி ஆக்லாந்தில் பிப்ரவரி 21-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு விடுதி சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் மீதான வழக்கின் தன்மையை பொறுத்து அவர் அணியில் இடம் பெறுவது இறுதி செய்யப்படும். ஆஷஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷஸ் போட்டி தொடரில் மோசமாக செயல்பட்ட ஆல்-ரவுண்டர் மொயீன் அலி மற்றும் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கேப்டன் ஜோரூட், டேவிட் மலான், வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.


இங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-

இயான் மோர்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரன், லிம் டாவ்சன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க்வுட்.