கிரிக்கெட்

ஜூன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து செல்கிறது + "||" + In June, the Indian cricket team goes to Ireland

ஜூன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து செல்கிறது

ஜூன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து செல்கிறது
இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

புதுடெல்லி,

இதற்கு முன்னதாக இந்திய அணி, அயர்லாந்து சென்று அந்த நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–அயர்லாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டிகள் டப்ளினில் முறையே ஜூன் 27–ந் தேதி மற்றும் 29–ந் தேதி நடக்கிறது.

இந்திய அணி ஏற்கனவே 2007–ம் ஆண்டு அயர்லாந்து சென்று ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியது. அதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணிக்கு எதிராக இதுவரை 3 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடி இருக்கிறது.

அதாவது 2009–ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நாட்டிங்காமில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்தது.