கிரிக்கெட்

3 நாடுகள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி + "||" + 3 nations cricket In the opening match Bangladesh victory

3 நாடுகள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி

3 நாடுகள் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி
3 நாடுகள் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றியடைந்தது.
டாக்கா,

வங்காளதேசம், ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்காளதேசத்தில் நேற்று தொடங்கியது. டாக்காவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 49 ஓவர்களில் 170 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய வங்காளதேச அணி 28.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிம் இக்பால் 84 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.