கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்:காயத்தால் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா விலகல்தினேஷ் கார்த்திக் சேர்ப்பு + "||" + South Africa Test Series: Wicket keeper Vibhithan Saha distanced by injury Dinesh Karthik joins

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்:காயத்தால் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா விலகல்தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்:காயத்தால் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா விலகல்தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றிய விருத்திமான் சஹா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றிய விருத்திமான் சஹா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. பார்த்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பயிற்சியின் போது விருத்திமான் சஹாவின் தசைப்பிடிப்பு காயத்தின் தன்மை அதிகரித்ததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், ஜோகனஸ்பர்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியினருடன் தினேஷ் கார்த்திக் இணைவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 32 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 23 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். கடைசியாக அவர் டெஸ்ட் போட்டியில் 2010-ம் ஆண்டில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம் பிடித்து இருந்தார்.