கிரிக்கெட்

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’ பிரதமர் மோடி வாழ்த்து + "||" + World Cup Cricket for the Blind: Defeat Pakistan India's 'champion'

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’ பிரதமர் மோடி வாழ்த்து

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்:
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’
பிரதமர் மோடி வாழ்த்து
6 அணிகள் இடையிலான பார்வையற்றோருக்கான 5-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது.
சார்ஜா,

6 அணிகள் இடையிலான பார்வையற்றோருக்கான 5-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் சார்ஜாவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் புகுந்த இந்திய அணி 38.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 309 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. இந்திய வீரர்கள் சுனில் ரமேஷ் 93 ரன்களும், கேப்டன் அஜய் திவாரி 62 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


2-வது முறையாக வாகை சூடிய இந்திய அணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இந்த வெற்றியின் மூலம் அவர்கள் நமது தேசத்தை பெருமைப்பட வைத்துள்ளார்கள். தங்களது ஆட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்கள்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.