கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்:தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா விலகல் + "||" + Last Test Cricket: South Africa player Pavuma distortion

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்:தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா விலகல்

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்:தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா விலகல்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது வலது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது வலது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை மறுதினம் (புதன்கிழமை) ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். முதல் இரு டெஸ்டில் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே மூன்று நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். தோல்வி கண்ட முதல் இரு போட்டியில் சேர்க்கப்படாத ரஹானேவும் பயிற்சியில் கவனம் செலுத்தினார். அவருடன், கேப்டன் கோலி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக கடைசி டெஸ்டில் ரஹானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.