முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி முதல் வெற்றி


முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 21 Jan 2018 9:00 PM GMT (Updated: 21 Jan 2018 8:46 PM GMT)

இலங்கை, வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

மிர்புர்,

இலங்கை, வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

மிர்புரில் நேற்று நடந்த 4-வது லீக்கில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 44 ஓவர்களில் 198 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 58 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் திசரா பெரேரா 4 விக்கெட்டுகளும், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை பெற்றது. குசல் பெரேரா 49 ரன்களும், திசரா பெரேரா 39 ரன்களும் (நாட்-அவுட்), கேப்டன் சன்டிமால் 38 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். முதல் இரு லீக்கில் தோற்றிருந்த இலங்கை அணி இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் நாளை மோதுகின்றன.

Next Story