கிரிக்கெட்

வீராட் கோலி சிறந்த கேப்டனா? கேள்வி எழுப்பும் -கிரேம் ஸ்மித் + "||" + Graeme Smith questions Virat Kohli's captaincy credentials

வீராட் கோலி சிறந்த கேப்டனா? கேள்வி எழுப்பும் -கிரேம் ஸ்மித்

வீராட் கோலி சிறந்த கேப்டனா?  கேள்வி எழுப்பும் -கிரேம் ஸ்மித்
இந்திய அணியின் நீண்டகால கேப்டன் தேர்வாக கோலி இருப்பாரா என்பது சந்தேகம் தான் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். #ViratKohli #GraemeSmith


தென்னாப்பிரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கிரீம் ஸ்மித்தும் சுனில் கவாஸ்கரும்  கலந்துரையாடினர்  அப்போது பேசிய ஸ்மித், கோலியை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த வீரர். அவரது ஆட்டம் பற்றி அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் மைதானத்தில் அவரே அனைவரின் தரநிலையையும் நிறுவுகிறார். 

கோலியை ஆக்கப்பூர்வமாக வழிநடத்தும், அவரது முடிவுகளை கேள்வி கேட்கும் மற்றும் மாற்றும் பயிற்சியாளர் இந்திய அணிக்கு தேவை.

வேறு பல சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், கோலியின் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவித்து மற்ற சாத்தியக்கூறுகள் குறித்து கோலியை சிந்திக்க வைக்கும் அளவுக்கான பயிற்சியாளர் தேவை. அதுதான் கோலியை சிறந்த தலைவராக்கும்.

கோலி ஒரு தனித்துவமான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சிறந்த கேப்டனா என்றால், உறுதியாக கூற முடியாது. கோலியின் தீவிரம் அவரது ஆட்டத்துக்கு உதவுகிறது. ஆனால், ஒரு கேப்டனாக எப்படியான தாக்கத்தை அணி மீது செலுத்துகிறோம் என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும். ஒரு கேப்டனாக கோலி, இந்த இடத்தில் வளர வேண்டியுள்ளது. சில நேரங்களில் கோலியின் எதிர்வினைகள், அணியின் மற்ற வீரர்களிடத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இந்தியாவில் மட்டுமின்றி ஒரு அணியாக வெளிநாடுகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்திய அணியின் நீண்ட நாள் கேப்டன் தேர்வாக கோலி இருப்பாரா என்பது சந்தேகம்தான் என கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கோலியின் கேப்டன்சி, அவரது அணுகுமுறை, ஆதிக்கம் ஆகியவை குறித்த பேச்சுகளும் விமர்சனங்களும் வலுவாக எழ தொடங்கிவிட்டன. எனவே நீண்ட நாட்கள் கோலி கேப்டனாக நீடிப்பாரா? அல்லது புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட்
விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் என டிராவிஸ் ஹெட் கூறினார்.
2. சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்
சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
3. ‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ விராட் கோலி ஆவேசம்
‘இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கவேண்டாம்’ என விராட் கோலி ரசிகருக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
4. விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று தனது 30-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
5. விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் !
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.