கிரிக்கெட்

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேசத்தை 82 ரன்னில் சுருட்டியது இலங்கை + "||" + Tripartite One day cricket

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேசத்தை 82 ரன்னில் சுருட்டியது இலங்கை

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேசத்தை 82 ரன்னில் சுருட்டியது இலங்கை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மிர்புரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதின.
மிர்புர்,

 முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 24 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் (26 ரன்), சபிர் ரகுமான் (10 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இலங்கை தரப்பில் லக்மல் 3 விக்கெட்டுகளும், சமீரா, திசரா பெரா, சன்டகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இலங்கை அணி 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றதுடன் இறுதிப்போட்டியையும் உறுதி செய்தது. வங்காளதேச அணியும் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு (3 வெற்றி, ஒரு தோல்வி) முன்னேறிவிட்டது. ஜிம்பாப்வே அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் மீண்டும் சந்திக்கின்றன.