கிரிக்கெட்

6 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்ம விருது + "||" + 6 players Padma Award for Celebrities

6 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்ம விருது

6 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்ம விருது
மத்திய அரசு நேற்று அறிவித்த பத்ம விருதுகளை 6 விளையாட்டு பிரபலங்களும் பெறுகிறார்கள்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தரும், தற்போதைய விக்கெட் கீப்பருமான டோனி, உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உலக பளுதூக்குதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த மீராபாய் சானு, ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்புக்குரிய முர்லிகாந்த் பெட்கர், முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார்கள்.