‘சேசிங் செய்வதில் கோலி கில்லாடி’ முன்னாள் வீரர்கள் புகழாரம்


‘சேசிங் செய்வதில் கோலி கில்லாடி’ முன்னாள் வீரர்கள் புகழாரம்
x
தினத்தந்தி 2 Feb 2018 8:45 PM GMT (Updated: 2 Feb 2018 8:13 PM GMT)

டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி (112 ரன்) சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

டர்பன்,

டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி (112 ரன்) சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அவரது ஒட்டுமொத்த 33 சதங்களில் 20 சதங்கள் 2–வது பேட்டிங் செய்கையில் எடுக்கப்பட்டவை ஆகும். அவற்றில் 18–ஐ வெற்றியாக மாற்றியிருக்கிறார். இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்த (சேசிங்) வகையில் அதிக சதங்கள் அடித்தவர் கோலி தான். இந்த வரிசையில் சச்சின் தெண்டுல்கர் (14 சதம்) 2–வது இடத்தில் இருக்கிறார்.

கோலியின் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சேசிங்’ செய்வதில் தான் சிறந்தவர் என்பதை கோலி மீண்டும் நிரூபித்து இருக்கிறார். நான் பார்த்தவரை ‘சேசிங்’ செய்வதில் கில்லாடி விராட் கோலி தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் தனது பதிவில் ‘என்ன ஒரு அற்புதமான சேசிங்....அருமையான ஒரு வீரர் கோலி. தான் விளையாடிய ஒவ்வொரு நாட்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுவும் நெருக்கடியான இந்த போட்டியில் சதத்தை அலட்டிக்கொள்ளாமல் எட்டியது போல் தெரிந்தது’ என்று கூறியுள்ளார். ‘உலக கிரிக்கெட் அரங்கில் சேசிங் செய்வதில் ராஜாவாக கோலி திகழ்கிறார்’ என்று முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, முகமது கைப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.


Next Story