கிரிக்கெட்

ஐ.சி.சி.இயக்குனராக இந்திரா நூயி நியமனம் + "||" + ICC Director Indra Nooyi appointed

ஐ.சி.சி.இயக்குனராக இந்திரா நூயி நியமனம்

ஐ.சி.சி.இயக்குனராக இந்திரா நூயி நியமனம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தனிப்பட்ட இயக்குனராக பெப்சி நிறுவனத்தின் சேர்மன் இந்திரா நூயி நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தனிப்பட்ட இயக்குனராக பெப்சி நிறுவனத்தின் சேர்மன் இந்திரா நூயி நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி.யின் முதல் தனிப்பட்ட பெண் இயக்குனர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இது குறித்து ஐ.சி.சி.சேர்மன் ‌ஷசாங் மனோகர் கருத்து தெரிவிக்கையில், ‘ஐ.சி.சி. நிர்வாக கவுன்சிலின் இணைய இருக்கும் இந்திரா நூயியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நிர்வாக திறமையை மேம்படுத்தும் நோக்கத்தின் ஒரு அங்கமாக அவர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.