கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: யுவராஜ்சிங் அரைசதம் அடித்தார் + "||" + Vijay Hazare Cup Cricket Yuvraj Singh scored a half

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: யுவராஜ்சிங் அரைசதம் அடித்தார்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: யுவராஜ்சிங் அரைசதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி, பரோடாவுடன் மோதியது. மழையால் 21 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பரோடா அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. விஷ்ணு சோலங்கி 77 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்சர்) சேகரித்தார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20.5 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, தோல்வியை தழுவியது. கேப்டன் யுவராஜ்சிங் அரைசதம் (51 ரன், 36 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தும் பலன் இல்லை. 3-வது லீக்கில் ஆடிய யுவராஜ்சிங் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.