வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 194 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து இலங்கை சாதனை


வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 194 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து இலங்கை சாதனை
x
தினத்தந்தி 15 Feb 2018 9:15 PM GMT (Updated: 15 Feb 2018 9:05 PM GMT)

இலங்கை – வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

மிர்புர்,

இலங்கை – வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் வங்காளதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சவுமியா சர்கார் (51 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (66 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் திரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி வெற்றிகரமாக விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான். இந்த சாதனை வெற்றிக்கு குசல் மென்டிஸ் (53 ரன், 27 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ‌ஷனகா (42 ரன், 24 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), திசரா பெரேரா (39 ரன், 18 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோரின் அதிரடி துணை நின்றது.

20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 தோல்விகளுக்கு பிறகு இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இவ்விரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story