கிரிக்கெட்

நன்றாக விளையாடிய போதும் அணியில் இருந்து நான் ஓரங்கட்டப்பட்டேன்: சுரேஷ் ரெய்னா ஆதங்கம் + "||" + Suresh Raina Says He Was Dropped Despite Performance

நன்றாக விளையாடிய போதும் அணியில் இருந்து நான் ஓரங்கட்டப்பட்டேன்: சுரேஷ் ரெய்னா ஆதங்கம்

நன்றாக விளையாடிய போதும் அணியில் இருந்து நான் ஓரங்கட்டப்பட்டேன்: சுரேஷ் ரெய்னா ஆதங்கம்
நன்றாக விளையாடிய போதும் அணியில் இருந்து நான் ஓரங்கட்டப்பட்டேன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். #SureshRaina
காசியாபாத்,

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா அண்மைக்காலமாக அணியில் இருந்து ஓரங்கப்பட்டு இருந்தார்.  இந்திய அணியில் இடம் பெற யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட காலம் யோ யோ டெஸ்டில் தேர்வு பெறாமல் இருந்த சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு இறுதியில் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், அவருக்கு உடனடியாக அணியில் இடம் கிடைக்கவில்லை.  நீண்ட கால காத்திருப்புக்கு பின், தற்போது, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட போரட்டத்துக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, மீண்டும் அறிமுக போட்டியில் விளையாட உள்ளதை போல உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது:-  சிறப்பாக விளையாடியிருந்த போதும், இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது  வலியை ஏற்படுத்தியது. ஆனால்,தற்போது நான் யோ யோ டெஸ்டில் தேர்வு பெற்று விட்டேன். மிகவும் வலிமையானவனாக உணர்கிறேன்.

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நாட்களில் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற அவா வலுவாக உள்ளது. என்னால் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் நான் இந்தியாவுக்காக விளையாடுவேன். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் நான் விளையாடுவேன். ஏனெனில், இங்கிலாந்தில் நான் சிறப்பாக விளையாடி இருக்கிறேன். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.  எனக்கு தற்போது 31 வயதாகிறது, என்னைப்பொறுத்தவரை வயது என்பது ஒரு எண் மட்டுமே. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்கும் போது மீண்டும் அறிமுக போட்டியில் களம் இறங்குவதை போல உணர்வேன்.” என்றார்.  மேலும், 4, அல்லது 5 இடத்தில் இறங்கி பேட் செய்வதையே தான் விரும்புவதாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சுரேஷ் ரெய்னாவின் உதவியால் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது: இங்கிலாந்து ஓட்டுநர் உருக்கம்
.சுரேஷ் ரெய்னாவின் உதவியால்தான் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது என்று இங்கிலாந்து பேருந்து ஓட்டுநர் உருக்கமாக தெரிவித்துள்ளார். #SureshRaina