கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி மிதாலி, மந்தனா அரைசதம் அடித்தனர் + "||" + Against South Africa Women win in 20 over cricket

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி மிதாலி, மந்தனா அரைசதம் அடித்தனர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி மிதாலி, மந்தனா அரைசதம் அடித்தனர்
இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்தது.

ஈஸ்ட் லண்டன்,

இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 142 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மிதாலிராஜ் (8 பவுண்டரியுடன் 76 ரன், நாட்–அவுட்), மந்தனா (4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்) அரைசதம் அடித்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது. நடக்கிறது. இதற்கிடையே, எஞ்சிய மூன்று ஆட்டங்களையும் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
2. ரஞ்சி கிரிக்கெட்: டெல்லியை வெளியேற்றியது பெங்கால்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பெங்கால் – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது.
3. அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்–12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது, இலங்கை
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்–12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை இலங்கை, வங்காளதேசம் அணிகள் இழந்துள்ளன.
4. ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்
ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
5. தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவித்துள்ளது.