கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் தொடர்: காயத்தால் டிவில்லியர்ஸ் விலகல் + "||" + 20 Over cricket Series: Divulie's distortion of injury

20 ஓவர் கிரிக்கெட் தொடர்: காயத்தால் டிவில்லியர்ஸ் விலகல்

20 ஓவர் கிரிக்கெட் தொடர்: காயத்தால் டிவில்லியர்ஸ் விலகல்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், இந்தியாவுக்கு எதிரான 5–வது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக இடது கால் முட்டியில் காயமடைந்தார்.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், இந்தியாவுக்கு எதிரான 5–வது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக இடது கால் முட்டியில் காயமடைந்தார். இருப்பினும் உடல்தகுதி பெற்றதால் கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் ஆடினார். ஆனால் தொடர்ந்து விளையாடியதால் காயத்தன்மை மோசமாகி விட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் கடைசி நேரத்தில் விலகியதுடன், எஞ்சிய தொடரில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.