கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு ‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு ரூ.12 கோடி + "||" + Virat Kohli and Co set for 'big pay hike', confirms BCCI

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு ‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு ரூ.12 கோடி

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விரைவில்  சம்பள உயர்வு ‘ஏ’ கிரேடு வீரர்களுக்கு  ரூ.12 கோடி
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #BCCI #ViratKohli
மும்பை

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்காமல் இருந்தது.

வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி, டோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்தில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வருகிற 3-ந் தேதி புறப்பட்டு செல்கிறது. அதற்கு முன்பு இந்திய வீரர்களுக்கான சம்பள உயர்வு இருக்கும்.

ஏ, பி. மற்றும் சி கிரேடு அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்துதான் வீரர்களை தரம் பிரித்து உள்ளார்.

‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த சீனியர் வீரரான டோனி ‘ஏ’ கிரேடில் நீடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. நேற்றைய கூட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அவரது கிரேடை குறைப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது இருக்கும் 3 கிரேடுகளை நான்கு கிரேடாக அதிகரிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.