கிரிக்கெட்

தியோதர் கிரிக்கெட்: அஸ்வின் விலகல் + "||" + Tiyotar Cricket: Ashwin distortion

தியோதர் கிரிக்கெட்: அஸ்வின் விலகல்

தியோதர் கிரிக்கெட்: அஸ்வின் விலகல்
தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் விஜய்ஹசாரே தொடரின் சாம்பியன் கர்நாடகா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

புதுடெல்லி,

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’ மற்றும் விஜய்ஹசாரே தொடரின் சாம்பியன் கர்நாடகா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. நாளை மறுதினம் தொடங்கி 8–ந்தேதி வரை தர்மசாலாவில் நடக்கும் இந்த போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் லேசான காயத்தால் அஸ்வின் அவதிப்படுவதாகவும், அவருக்கு ஒரு வார காலம் ஓய்வு தேவை என்றும் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவகுழு அறிவுரை வழங்கியது. இதையடுத்து தியோதர் கோப்பை போட்டியில் இருந்து அஸ்வின் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ‌ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பு, மராட்டிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அங்கித் பாவ்னேவிடம் வழங்கப்பட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...