கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்:ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Australia all-out in 243 runs

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்:ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்-அவுட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்:ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்-அவுட்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
போர்ட்எலிசபெத்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட்எலிசபெத் நகரில் நேற்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்க அணியில் ஒரே ஒரு மாற்றமாக மோர்னே மோர்கலுக்கு பதிலாக நிகிடி சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி கேமரூன் பான்கிராப்ட்டும், துணை கேப்டன் டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். நேர்த்தியான தொடக்கம் அமைத்து தந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் (26.4 ஓவர்) திரட்டியது. பான்கிராப்ட் (38 ரன்) பிலாண்டரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜாவும் (4 ரன்) அவரது பந்து வீச்சுக்கே இரையானார். டேவிட் வார்னர் (63 ரன், 100 பந்து, 9 பவுண்டரி), நிகிடியின் பவுலிங்கில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவின் ‘இன்ஸ்விங்’ தாக்குதலில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை சீர்குலைந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் (25 ரன்), ஷான் மார்ஷ் (24 ரன்) இருவரும் ரபடாவின் அடுத்தடுத்த ஓவர்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். சுமித், டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பலன் இல்லை. வலுவான தொடக்கம் கிடைத்தும் மிடில் வரிசையில் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக தாரைவார்த்ததால் அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியால் நிமிர முடியாமல் போய் விட்டது. விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் தனது பங்குக்கு 36 ரன்கள் எடுத்தார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் ரபடா 5 விக்கெட்டுகளும், நிகிடி 3 விக்கெட்டுகளும், பிலாண்டர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஒரு இன்னிங்சில் ரபடா 5 விக்கெட்டுகளை சாய்ப்பது இது 8-வது முறையாகும்.

அடுத்து தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி மார்க்ராமின் (11 ரன்) விக்கெட்டை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.