கிரிக்கெட்

கெய்ல், யுவராஜ்சிங் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தால் போதும் : பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக் பேட்டி + "||" + Punjab team consultant Sehwag interviewed, Gayle and Yuvraj Singh have enough success in one or two matches

கெய்ல், யுவராஜ்சிங் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தால் போதும் : பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக் பேட்டி

கெய்ல், யுவராஜ்சிங் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தால் போதும் : பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக் பேட்டி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாட இருக்கும் கெய்ல், யுவராஜ்சிங் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தால் போதும் என பஞ்சாப் அணியின் ஆலோசகர் ஷேவாக் கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஷேவாக் அளித்த பேட்டியில், ‘கெய்ல், யுவராஜ்சிங் ஆகியோர் அடிப்படை விலையில் (ரூ.2 கோடி) எங்கள் அணிக்கு கிடைத்தது சிறப்பானதாகும். அவரை மற்ற அணிகளும் ஏலத்தில் கேட்டு இருந்தால் இருவரும் அதிக விலைக்கு போய் இருப்பார்கள். 

இருவரும் மேட்ச் வின்னர்கள். அவர்கள் இருவரும் ஒன்றிரண்டு ஆட்டங்களில் எங்களுக்கு வெற்றி தேடிக்கொடுத்தாலே அவர்களுக்காக நாங்கள் முதலீடு செய்ததற்கான பலனை பெற்று விட முடியும். முதல் ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கெய்ல் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது’ என்றார்.