கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான2-வது ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி தோல்வி + "||" + Against Australia In the 2nd game Indian women's team failed

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான2-வது ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான2-வது ஆட்டத்திலும் இந்திய பெண்கள் அணி தோல்வி
இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது.
வதோதரா,

இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது. நிகோல் போல்டான் (84 ரன்), எலிஸ் பெர்ரி (70 ரன்), பெத் மூனி (56 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆல்-ஆனது. அதிகபட்சமாக மந்தனா 67 ரன்கள் எடுத்தார். கேப்டன் மிதாலிராஜ் 15 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.