கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வேயிடம் சுருண்டது அயர்லாந்து + "||" + World Cup Cricket Qualification round: Ireland stirred to Zimbabwe

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வேயிடம் சுருண்டது அயர்லாந்து

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வேயிடம் சுருண்டது அயர்லாந்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.

ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஹராரேவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே–அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்களுடன் பரிதவித்த ஜிம்பாப்வே அணி சிகந்தர் ராசாவின் (69 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதத்தால் கவுரவமான ஸ்கோரை எட்டியது. அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து 34.2 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிசோரா, கிரீமர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சூப்பர் சிக்ஸ் சுற்றில் நாளைய ஆட்டத்தில் அயர்லாந்து–ஸ்காட்லாந்து அணிகள் சந்திக்கின்றன.