கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து + "||" + World Cup Cricket Qualification round: Scotland won Ireland

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.

ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரேவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் அயர்லாந்து–ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. ஆன்டி பால்பிர்னி (105 ரன்) சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 47.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, இறுதிப்போட்டி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.
2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்? கவாஸ்கர் அதிரடி கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–