கிரிக்கெட்

ஸ்டீவன் சுமித் உடனான திருமணத்தை நிறுத்தி விடுங்கள் காதலிக்கு ரசிகர்கள் அறிவுரை + "||" + Nasty online trolls target Steve Smith's fiancée Dani Willis - calling on her to DUMP the fallen Australian captain for his role in the sandpaper cheating scandal

ஸ்டீவன் சுமித் உடனான திருமணத்தை நிறுத்தி விடுங்கள் காதலிக்கு ரசிகர்கள் அறிவுரை

ஸ்டீவன் சுமித் உடனான திருமணத்தை நிறுத்தி விடுங்கள் காதலிக்கு ரசிகர்கள் அறிவுரை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்திவிடுங்கள் என அவர் வருங்கால மனைவிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற சொரசொரப்பு காகிதத்தால் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும், இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது. ஆஸ்திரேலிய வீரர்களின் மோசடி, உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவி பறிபோனது.

இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதித்தது. அத்துடன் தடை காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கு ஸ்டீவன் சுமித்தின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான 28 வயதான ஸ்டீவன் சுமித் சிட்னி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது குற்றஉணர்வில் வெதும்பிய அவர் தன்னை மன்னித்து விடும்படி கூறி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். அருகில் நின்ற அவரது தந்தை பீட்டர் அவரை தேற்றினார்.

இந்நிலையில் ஸ்மித், அவர் காதலி டேனி வில்ஸ்-சை இந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக் கிறார். பந்தை சேதப்படுத்திய பிரச்சினை காரணமாக, டேனி வில்ஸ்-க்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் அட் வைஸ் செய்துள்ளனர். அதில்,  சுமித் ஒரு மோசடி பேர்வழி. அவருடனான திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்று பல ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இன்னொருவர்,சட்டம் படித்தவர் நீங்கள். உங்களுக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் வழக்கறிஞராக இருப்பதால் உங்கள் கணவரைதான் நியாயப்படுத்துவீர்கள், அவருக்கு ஆதரவாகத்தான் இருப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

இந்த போலியான நபரிடம் இருந்து நீங்கள் விலகிவிட முடியுமா?என்று மற்றொரு ரசிகரும், ஸ்மித்தான் மோசடி செய்தார். அதற்கு ஏன் டேனியை ரசிகர்கள் தொந்தரவு செய்ய வேண்டும். என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்

இந்த காரசார கருத்துகளால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், எதற்கும் பதிலளிக்கவில்லை டேனி வில்ஸ்!