கிரிக்கெட்

சுமித், வார்னர் குறித்து அம்பலமான மற்றொரு தகவல் + "||" + Match Referee Had Warned About Steve Smith, David Warner In 2016: Report

சுமித், வார்னர் குறித்து அம்பலமான மற்றொரு தகவல்

சுமித், வார்னர் குறித்து அம்பலமான மற்றொரு தகவல்
எச்சரிக்கைக்கு பிறகும் சுமித், வார்னர் இவ்வாறு நடந்து உள்ளனர் ஆஸ்திரேலிய நடுவர் கடிதம்.
சிட்னி

கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற சொரசொரப்பு காகிதத்தால் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும், இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது. ஆஸ்திரேலிய வீரர்களின் மோசடி, உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவி பறிபோனது.

இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதித்தது. அத்துடன் தடை காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கு ஸ்டீவன் சுமித்தின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான 28 வயதான ஸ்டீவன் சுமித் சிட்னி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது குற்றஉணர்வில் வெதும்பிய அவர் தன்னை மன்னித்து விடும்படி கூறி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். அருகில் நின்ற அவரது தந்தை பீட்டர் அவரை தேற்றினார்.

இது பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், அவர் இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல என்று ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் அனுப்பியுள்ள மின்னஞ்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் , சுமித் மற்றும் வார்னர் குறித்து ஆஸ்திரேலிய நடுவர்கள் தேர்வுக்குழு தலைவர் சைமன் டர்ஃபுல்லுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், 2016- ம் ஆண்டு நடந்த ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில், விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய சுமித்தும், வார்னரும் பந்தை சேதப்படுத்த முயன்றனர்.

அப்போது அவர்களை நான் எச்சரித்தேன். எனவே தற்போது நடந்துள்ள ஸ்மித்தின் இந்த நடத்தை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை, இரு மூத்த வீரர்களும் சேர்ந்து இளம் வீரரான பான்கிராப்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னடவை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் தான், பான்கிராப்ட்டுக்கு இந்த ஐடியாவை வழங்கியிருக்க வேண்டும் என அவர் அனுப்பிய மின்னஞ்சல் காரணமாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், சுமித், வார்னர் மீது கடுமை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பந்தை சேதப்படுத்த சொன்னது வார்னர் தான்’ - போட்டு உடைத்தார், பான்கிராப்ட்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தும்படி கூறியது டேவிட் வார்னர் தான் என்று பான்கிராப்ட் கூறியுள்ளார்.
2. ஐபில் போட்டியில் இதுவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
ஐபில் போட்டி தொடங்கிய 2008 முதல் 2019 வரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் விவரம் வருமாறு:-
3. வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்
வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, மொகித் சர்மா ரூ. 5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
4. ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்
ஐபிஎல் ஏலத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, அக்சர் படேல், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் அதிக விலை போய் உள்ளனர்.
5. ஐ.பி.எல். : விலை போகாத யுவராஜ், பிரெண்டன் மெக்கலம், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
ஐ.பி.எல். போட்டியில் விலை போகாத யுவராஜ், அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். ஹனுமான் விகாரி ரூ.2 கோடி, கார்லோஸ் பிராட்வேட் ரூ.5 கோடி, சிம்ரான் ஹெட்மியர் ரூ.4.2 கோடி.

ஆசிரியரின் தேர்வுகள்...