ஐதராபாத் அணியில் அலெக்ஸ் ஹாலெஸ் சேர்ப்பு


ஐதராபாத் அணியில் அலெக்ஸ் ஹாலெஸ் சேர்ப்பு
x
தினத்தந்தி 31 March 2018 9:00 PM GMT (Updated: 31 March 2018 8:39 PM GMT)

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டிக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

புதுடெல்லி,

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டிக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்ததால், இந்த ஆண்டில் ஐ.பி.எல்.–ல் விளையாட வார்னருக்கு அனுமதி இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது. இதையடுத்து ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஐதராபாத் அணியில் வார்னருக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரராக அலெக்ஸ் ஹாலெஸ் (இங்கிலாந்து) சேர்க்கப்பட்டு இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஏலத்தில் விலை போகாத ஹாலெஸ், அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

29 வயதான ஹாலெஸ், 52 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 1,456 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story