கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்நியூசிலாந்து அணி தடுமாற்றம் + "||" + Test against England The New Zealand team is stunned

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்நியூசிலாந்து அணி தடுமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்நியூசிலாந்து அணி தடுமாற்றம்
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது.
கிறைஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 307 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பேர்ஸ்டோ 101 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தடுமாற்றத்துடன் தொடங்கிய நியூசிலாந்து அணி 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. நெருக்கடியான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் வாட்லிங், கிரான்ட்ஹோம் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். கிரான்ட்ஹோம் 72 ரன்களில் கேட்ச் ஆனார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. வாட்லிங் 77 ரன்னுடனும், டிம் சவுதி 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.