கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து + "||" + England Cricket Test against New Zealand in strong position

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 231 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 307 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 278 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 85 ரன்களும், டிம் சவுதி 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அடுத்து 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் அலஸ்டயர் குக் (14 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் மார்க் ஸ்டோன்மானும் (60 ரன்), ஜேம்ஸ் வின்சும் (76 ரன்) அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருக்கிறது. கேப்டன் ஜோ ரூட் (30 ரன்), டேவிட் மலான் (19 ரன்) களத்தில் உள்ளனர். இதுவரை 231 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று 4-வது நாளில் தொடர்ந்து விளையாடும்.

ஆசிரியரின் தேர்வுகள்...