கிரிக்கெட்

கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்: சென்னை அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி + "||" + Is wearing black badge while playing?

கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்: சென்னை அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி

கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும்: சென்னை அணி பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி
கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும் என்று மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்து உள்ளார். #MichaelHussey #IPL
சென்னை,

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்தப் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழக கிரிக்கெட் சங்கம் விதித்துள்ளது. 

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சி கலந்து கொண்டார். அப்போது, “ தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது.  நாளை நடைபெறும் போட்டியில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது பற்றி அணி சிஇஓ தான் முடிவு செய்யவேண்டும்” என்றார்.  

மேலும், காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து கேதர் ஜாதவ் விலகியிருப்பதாவும் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்சி ஆஸ்திரேலியாவைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.